ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து:  35 பேர் பலி !

Friday, May 5th, 2017

ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றியபோது ஏற்பட்ட வெடி விபத்துகாரணமாக சுமார் 35 பேர் உயிரிழந்துள்ள என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரானின் வடக்குப் பகுதியிலுள்ள ஸெமெஸ்டான்யுர்ட் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து காரணமாக, சுமார் 35 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் வெடி விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவில் சுமார் 50 பேர்வரையில் சிக்கிக்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் குறித்த விபத்தில் காயமுற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு மீட்பு படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த விபத்து காரணமாக, சுமார் 2 கிலோமீற்றர் நீளமான சுரங்கம் இடிபாடுகளுக்குட்பட்டுள்ளதனால், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என ஈரானிய அச்சம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: