ஈரானிய கடற்படை கலம்  மீது அமெரிக்க கப்பல் எச்சரிக்கை வேட்டு!

coltkn-01-11-fr-01151752272_5150531_10012017_MSS Wednesday, January 11th, 2017

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க போர் கப்பல் ஒன்றை நோக்கி வேகமாக வந்த ஈரானின் நான்கு தாக்குதல் படகுகளுக்கு எதிராக அந்த போர் கப்பல் எச்சரிக்கை வேட்டுகளை செலுத்தியுள்ளது.

யு.எஸ்.எஸ் மஹான் போர் கப்பலில் இருந்து எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தப்பட்டதை அடுத்து நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது “பாதுகாப்பற்ற மற்றும் தொழில்முறையற்ற” செயல் என அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஈரான் புரட்சிப் படையைச் சேர்ந்த இந்த தாக்குதல் படகுகளில் இருந்த வீரர்கள் தமது ஆயுதங்களை ஏந்தியபடியே அமெரிக்க கப்பலை நோக்கி வந்ததாக அமெரிக்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த படகுகளுக்கு ரேடியோ தகவல் தொடர்பு மூலம் பல தடவைகள் எச்சரிக்கப்பட்டபோதும் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேகமாக வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இறுதியில் போர் கப்பலின் 50 கலிபர் இயந்திர துப்பாக்கி மூலம் மூன்று எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஓமான் குடா மற்றும் பாரசீக குடாவுக்கு இடையில் உள்ள ஹோர்மூஸ் நீரிணையை ஒட்டி கடந்த காலங்களிலும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இவ்வாறான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

coltkn-01-11-fr-01151752272_5150531_10012017_MSS


அழகான விளையாட்டின் அசிங்கமான முகம்': கத்தார் மீது அம்னெஸ்டி இண்டர் நேஷனல் மனித உரிமைகள் அமைப்பு விம...
குழந்தைகள் யாசகம் செய்ய செனகலில் தடை!
கடும் மழை எதிரொலி: சென்னை வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன!
ஜப்பானில் பலம்வாய்ந்த நிலநடுக்கம்!
காபூல் மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல்- 27 பேர் பலி!