ஈரானின் ஜனாதிபதி – ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் சந்திப்பு
Monday, August 7th, 2017ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் பெடரிக்கா மொஹெரினி (Hassan Rouhani), ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரௌஹானியை நேரில் சந்தித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்ட குறித்த சந்திப்பு, இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக கடைமையாற்றவுள்ள ரௌஹானியின் பதவியேற்பு நிகழ்வுக்கு முன்னதாக நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் ஈராக்கின் ஜனாதிபதி பௌட் மஸ்சௌம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. அதில் ரௌஹானி, 57 வீத வாக்குகளால் வெற்றி பெற்றார்.
அத்துடன், ஹசன் ரௌஹானியை இரண்டாவது முறையாக மீண்டும் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி-கமெய்னியும் ஒப்புதல் அளித்தார்.
அதனடிப்படையில் அவர் இன்று உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு நிகழ்வினைத் தொடர்ந்து இன்னும் இரண்டு வாரத்தில் அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் அதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|