ஈராக் ராணுவ தளம் மீது ரொக்கெட் தாக்குதல் – துருக்கி வீரர் பலி!

Friday, April 16th, 2021

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
அந்த தளத்தை குறி வைத்து 3 ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ரொக்கெட், ராணுவ தளத்தை தாக்கியது. மற்ற இரு ரொக்கெட்டுகளும் ஊருக்குள் வீழ்ந்து வெடித்துள்ளது.
இந்த தாக்குதலில் துருக்கி வீரர் ஒருவர் பலியானார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்துள்ள நிலையில் இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால் துருக்கி படைகள், ஈராக்கில் இருந்து கொண்டு குர்தீஷ் இன போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: