ஈராக்கில் 39 இந்தியர்களைக் காணவில்லை…கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம்!

19 Monday, July 17th, 2017

ஈராக்கில் யுத்தம் இடம்பெறும் படுஸ் பிரதேசத்தில் 39 இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக இந்திய வெளிவிவகார துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார் இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன

காணாமல் போன குறித்த 39 பேரும் கடத்தி செல்லப்பட்டிருப்பார்களாயின் அவர்கள் பெரும்பாலும் புடுஷ் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என வெளிவிவகாரதுறை ஜெனரல் வீ ஜே சிங்ஹ தெரிவித்துள்ளார்

இந்தநிலையில், காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை இன்று சந்தித்த சுஸ்மா சுவராஜ் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்

வெளிவிவகார துறை பிரதி அமைச்சர் எம்.ஜே அக்பர், இந்த விடயமாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது, அக்பர் ஈராக்கின் வெளிவிவகார துறை அமைச்சருடன் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுஸ்மா சுவராஜ் குறிப்பிடப்பட்டுள்ளது


சுய கட்டுப்பாடுடன் ஈரான் செயல்பட வேண்டும்: பான் கீ மூன் வலியுறுத்தல்
கடந்த மே மாதம் உலகிகை வாட்டியெடுத்த வெப்பம் - நாசா
அதிக வாக்குப்பதிவால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு காரணம்?
இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் இலங்கை பலப்பரீட்சை!
பொகோட்டாவில் குண்டு வெடிப்பு: பொலிஸார் ஒருவர்பலி, 30 பேர் காயம்!