ஈராக்கை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 328 ஆக உயர்வு!

Monday, November 13th, 2017

ஈராக்கில் ஏற்பட்ட நிலநடுக்க த்தை அடுத்து  பலியானோரின் எண்ணிக்கை 328 -ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டச் செய்திக் தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் ஈராக் பகுதிகளுக்கு இடையே நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் ஹலாப்ஜா நகரிலிருந்து 32கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் கெர்மன்ஷா மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 7.2 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடர்பாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். இதனால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. மீட்புப் பணியும் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. இதுவரை 328 பேர் இறந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 1500 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: