ஈராக்கில் தற்கொலை குண்டுத்தாக்குதல் – 25 பேர் பலி!

Saturday, June 10th, 2017

ஈராக்கின் கெர்பலா பிரதேசத்தில் சந்தை தொகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி ஷியா முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதியென தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தற்கொலை குண்டுத்தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.