ஈராக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இதுவரை 400 பேர் பலி!

201711131513279599_Iraq-powerful-earthquake-Death-toll-rises-to-330_SECVPF Tuesday, November 14th, 2017

ஈரான்-ஈராக் நாடுகளின் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 400 பேர் பலியாகியுள்ளனர். 6,000 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும்  வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் இன்று(13) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் ஏற்பட்ட குறித்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந் நிலநடுக்கத்தில் சுமார் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.