ஈராக்கின் உள்துறை அமைச்சர் இராஜினாமா!

Wednesday, July 6th, 2016
165 பேரை பலியெடுத்த பாக்தாத் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஈராக்கின் உள்துறை அமைச்சர் முகமது அல் கப்பான் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

நகரை முறையாக பாதுகாக்க தவறியதாக அரசின் மீது கோபங்கள் எழுந்துள்ளன. ஈராக் பிரதமர் ஹய்தர் அல் அபாதி இந்த வார இறுதியில் சம்பவ இடத்தை பார்வையிடச் சென்றபோது அவரின் வாகன அணியின் மீது அதிருப்தியிலிருந்த உள்ளூர் வாசிகளால் கற்கள் எறியப்பட்டன.

ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த கப்பன் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பின் குண்டுதாரி பல பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை கடந்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அந்த பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் பலனற்றவைகள் என்றும் அவர் விவரித்துள்ளார்.

Related posts: