ஈஃபிள் கோபுரத்துக்கு அச்சுறுத்தல் – பாரிஸ் நகரில் பெரும் பதற்றம்!

பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரத்தை தகர்ப்பதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் montpellier என்ற பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ளவிருந்த நிலையில், 4 நான்கு தீவிரவாதிகள் பிரான்ஸ் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பிரான்ஸ் நாட்டின் சுற்றுலா தலங்கள் பலவற்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தமை குறித்து தெரியவந்துள்ளது.
குறிப்பாக ஈஃபிள் கோபுரம் மீது 16 வயதான பெண் உள்ளிட்ட மூன்று தீவிரவாதிகளினால் ஒரே நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு தகர்க்க திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்கள், தீவிரவாதிகள் பலருடன் தொடர்புகொண்டுள்ளதாகவும், இது குறித்து பாரிஸ் புலனாய்வு துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நாள் முதல் பாரிஸ் நகர் முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|