இஸ்லாம் எதிர்ப்பாளியே யூகிப் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது சிறந்தது – பீட்டர்

இஸ்லாம் மதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் ஒருவர் யூகிப் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது சிறந்தது என யூகிப் கட்சியின் துணைத் தலைவர் பீட்டர் (Peter Whittle) தெரிவித்துள்ளார்.
ஷரியா சட்டம் தொடர்பில் எழும் அழுத்தங்கள் குறித்து கண்காணிப்பவரான வாட்டர்ஸ், அண்மையில் ஷரியா திட்டம் தொடர்பில் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் யூகிப் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட தீர்மானித்துள்ளார். இந்நிலையில் குறித்த பதவிக்கு வாட்டர்ஸ் போட்டியிடுகின்றமை சிறந்தது என பீட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இஸ்லாமிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் ஒருவர் யூகிப் கட்சியின் தலைவராக நியமிக்கப்படின் அது கட்சியின் அழிவிற்கு இட்டுச் செல்லும் என யூகிப் கட்சியின் முன்னாள் தலைவர் நைஜல் பராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|