இஸ்லாமியர்களின் தாயகமாக மாறும் ஜேர்மனி!

Monday, August 28th, 2017

ஜேர்மனியில் குடியேறும் இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் அந்நாட்டுடன் தங்களுக்கு நெருங்கிய உறவு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனியில் மட்டுமே அதிகளவிலான புலம்பெயர்ந்தர்கள் குடியேறி வருகின்றனர்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஜேர்மனி சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்களை தன் நாட்டிற்குள் அனுமதித்துள்ளது.இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்.ஜேர்மனியில் தற்போது சுமார் 4.7 மில்லியன் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.ஜேர்மனியின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 19 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்களை இன்றளவும் ஏற்க மறுத்து வருகின்றனர்.

எனினும், ஜேர்மனியில் இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் ஒவ்வொரு நாளும் பிரகாசமாக வளர்ந்து வருகிறது.ஜேர்மன் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று அண்மையில் எடுத்த ஆய்வில் பிற மதத்தினரை விட இஸ்லாமியர்கள் சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது.சுமார் 10,000 இஸ்லாமியர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில், ஜேர்மனிக்கு புகலிடம் கோரி வந்த இஸ்லாமியர்களில் 60 சதவிகிதத்தினர் முழு நேர பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

எஞ்சிய 20 சதவிகிதத்தினர் பகுதி நேர பணியை செய்து வருகின்றனர்.இப்புள்ளி விபரத்தை ஜேர்மனி குடிமக்களுடன் ஒப்பிடுகையில் சம அளவில் இருப்பது தெரியவந்துள்ளது.சுவிஸ், ஆஸ்திரியா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களை விட ஜேர்மனியில் உள்ள இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக உள்ளது.இதுமட்டுமில்லாமல், ஜேர்மனியில் 4.7 மில்லியன் இஸ்லாமியர்களில் 96 சதவிகிதத்தினர் ‘ஜேர்மனி நாட்டுடன் தங்களுக்கு நெருங்கிய உறவு இருப்பதாக உணர்வதால் இது தங்களது தாயகமாகவே மாறி வருகிறது’ என உருக்கமாக கூறியுள்ளனர்

Related posts: