இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேல் விஜயம்!

Tuesday, October 17th, 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதுடன் தனது இரு போர் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தியும் உள்ளது.

இந்நிலையிலேயே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன்-ஜீன்-பியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது, ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்திய ஜனாதிபதி அப்தெல் பக்தா எல்-சிசி, பாலஸ்தீனிய மேற்கு கரை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரையும் ஜோ பைடன் சந்திக்கவுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் காசா மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி மற்றும் பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: