இஸ்ரேல் பிரதமருக்கு மீண்டும் விசாரணை!

Wednesday, June 13th, 2018

இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு அந்த நாட்டின் காவற்துறையினரால் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றான அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கான அலைக்கற்றை ஒதுக்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்னரும் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததுடன் அவரை பதவி விலகுமாறுகோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: