இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் – அமைதியை உருவாக்க தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் சிரில் ரமபோசாஅறிவிப்பு!

Friday, October 13th, 2023

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் சூழ்நிலையில் தலையிட தென்னாபிரிக்கா தயாராக இருப்பதாக தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

கடந்த 6 நாட்களாக இஸ்ரேலிற்கும ஹமாஸ் அமைப்பினருக்கும் கடும் யுத்தம் இடம்பெற்றுவருகிறது, இதில் அதிகளவாக பொதுமக்களே பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில்,தென்னாபிரிக்க அதிபர் உடனடியாக போர் நிறுத்தத்தை கோருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், ஆபிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் மோதல்களைத் தீர்ப்பதில் தமது நாட்டுக்கு அனுபவம் உள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாக அதிபர் சிறில் ரமபோசா கூறியுள்ளார்.

தென்னாபிரிக்க அதிபர், பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியங்களால் ஆழ்ந்த கவலையடைவதாகவும், தேவைப்படும் மக்களைச் சென்றடைய மனிதாபிமான வழித்தடங்களை உடனடியாகவும் நிபந்தனையின்றி திறக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவிற்கான மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருளை துண்டித்துள்ளனர், மேலும் அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளும் திரும்பப் பெற்ற பிறகுதான் முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: