இஸ்ரேலுடனான உறவினை மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

Thursday, January 28th, 2021

இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான தனது உறுதியான உறுதிப்பாட்டை அமெரிக்கா மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
மேலும் பிராந்தியத்தில் அமைதியை முன்னேற்றுவதற்காக இஸ்ரேலுடன் தொடர்ந்து பணியாற்றும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசியுடனான தொலைபேசியின் உரையாடிய பிளிங்கன், “ஆபிரகாம் உடன்படிக்கைகள்” மூலம் அண்மையில் அடைந்த முன்னேற்றத்தையும் பாராட்டியுள்ளார்.
மேலும் அந்த முன்னேற்றத்தை மேலும் கட்டியெழுப்புவதில் அமெரிக்க மேலும் ஆர்வத்தை கொண்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அஷ்கெனாசி மற்றும் செயலாளர் பிளிங்கன் ஆகியோர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறுதியான பங்காளித்துவத்தை இதன்போது ஒப்புக்கொண்டனர், மேலும் இரு நாடுகளும் எதிர்வரும் சவால்களில் நெருக்கமாக இணைந்து செயல்படும் என்றும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: