இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் !
Monday, September 2nd, 2024இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த 6 பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன் பல கோஷங்களை எழுப்பி எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இதன்போது டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் கூடிய பொது மக்கள், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினர்.
00
Related posts:
நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புட்டின் - அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவிப்பு!
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் - 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல...
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 146 பேர் காயம்!
|
|