இவ்வாண்டிற்கான பிரபல நபராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு!

Friday, December 9th, 2016

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து வெளியாகும் வார இதழான டைம் (Time), பிரபலமடைந்த உலகத் தலைவர்கள், கலைஞர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரைத் தெரிவு செய்து, அவர்களை பிரபல நபர்களாக ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது.

அமெரிக்க அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் இவ்வாண்டிற்கான பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலரி கிளின்டன் பிடித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 11 ஆவது இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். டைம் இதழின் பிரபல நபர் பட்டியலில் மோடி தெரிவு செய்யப்பட்டிருப்பது இது 2 ஆவது முறையாகும். டைம் இதழில் முதலிடம் பிடித்ததைக் கௌரவமாகத் தாம் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

TIME_TRUMP

Related posts: