இளவரசி டயானா தொடர்பில் தாயார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

Saturday, August 12th, 2017

இளவரசர் ஹரி பிறந்த அன்று தன்னுடைய வார்த்தைகளால் டயானாவை கணவர் சார்ள்ஸ் அழ வைத்தார் என முன்னாள் உதவியாளர் Paul Burrell கூறியுள்ளார்.

பிரித்தானிய இளவரசி டயானா உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் அவர் குறித்த ஆவணப்படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் டயானா குறித்து யாருக்கும் தெரியாத விடயங்களை அவரின் முன்னாள் தலைமை உதவியாளர் Paul Burrell கூறியுள்ளார்.Paul கூறுகையில், இளவரசர் ஹரி பிறந்த அன்று இரவு சார்ள்ஸ் டயானாவிடம், என் கடமை இப்போது முடிந்து விட்டது என ஹரி பிறந்ததை குறிக்கும் வகையில் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டயானா சார்ள்ஸ் உடனான தனது மெல்லிய மகிழ்ச்சியும் முடிவுக்கு வந்து விட்டதாக எண்ணி இரவு முழுவதும் அழுதுள்ளார் என Paul கூறியுள்ளார். இதன் மூலம் தனது காதலி Camilla Parker உடனான தொடர்பை மீண்டும் புதுப்பிக்க சார்லஸ் நினைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கணவரை டயானா பிரிந்த பின்னர் Dodi Fayed என்பவரை அவர் காதலித்தார். இந்த விடயம் டயானாவின் தாய் Francesக்கு கோபத்தை ஏற்படுத்தியதையடுத்து மகளை விபச்சாரி என தொலைபேசியில் பலமுறை அவர் கூறினார்.இனி இப்படி சொன்னால் உன்னுடன் நான் பேசவே மாட்டேன் என டயானா தாயை நோக்கி கூறியதாகவும் Paul தெரிவித்துள்ளார்.


பிரித்தானிய நாடாளுமன்றம் தற்காலிகமாக மூடப்பட்டது!
பயங்கரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் - இந்தியா!
சிரியாவில் நிரந்தர இராணுவ முகாம் அமைக்கிறது ரஷ்யா!
தாய்லாந்து பிரதமர் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு: அமெரிக்க செனட்!