இல்லாத படையினருக்கு ஊதியமா? பென்டகனை கோரும் அமெரிக்க கண்காணிப்பு அமைப்பு!
Saturday, October 8th, 2016ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைப்பிரிவுகளில் பணிபுரிவதாக ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் போலியாக சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாகவும், அதுகுறித்து விளக்க வேண்டும் என்று அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க அரசின் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஊதியம் அனைவருக்கும் வழங்கப்பட்டாலும், 26 ஆயிரம் படைப்பிரிவினரில் பாதி அளவானோர் உண்மையில் இல்லை என்று ஹால்மண்ட் மாகாணத்தின் அறிக்கைகள் மட்டுமே கூறுகின்றன.இந்த மோசடியை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என ஆப்கன் மறுகட்டமைப்பை மேற்பார்வையிடும் அமெரிக்க அதிகாரி ஜான் சோப்கோவிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டிலிருந்து ஆப்கன் பாதுகாப்பு படைப்பிரிவுகளை ஆதரிப்பதற்காக 68 பில்லியன் டாலரை அமெரிக்கா செலவழித்துள்ளது.இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவும், நேட்டோ கூட்டணி நாடுகளும் 2020 ஆம் ஆண்டு வரை ஆப்கன் படை மற்றும் காவல்துறைக்கு ஆண்டுதோறும் சுமார் 5 பில்லியன் டாலர் வழங்க உறுதி அளித்துள்ளன.
Related posts:
|
|