இலண்டன் வெடித்துச் சிதறுமாம்? எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்!

Friday, May 27th, 2016
இலண்டன் மாநகரின் மீது தாக்குதல் நடத்த இருப்பதை ஐ.எஸ் அமைப்பினர் சூசகமாக குறிப்பிட்டு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ் அமைப்பின் பரப்புரையாளராக செயல்பட்டுவரும் இங்கிலாந்து நாட்டின்  சாலி ஜோன்ஸ் தமது டுவிட்டர் பக்கத்தில் –

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கண்டிப்பாக தான் லண்டன் நகருக்குள் செல்ல துணிவதில்லை எனவும், அதுவும் கண்டிப்பாக ரயில் சேவைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த பதிவில் இலண்டன் வெடித்துச் சிதறவுள்ளது எனவும் பதிவிட்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பு மீது கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல்களை கேலி செய்துள்ள சாலி, ராணுவ நடவடிக்கைகளுக்கு பதில் உடனடியாக திருப்பி தரப்படும் என்றார்.

இதனிடையே, வெளியான டுவிட்டர் எச்சரிக்கை பதிவுகள் சாலி ஜோன்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டவை தானா என்ற சந்தேகத்தை புலனாய்வு குழு இயக்குனர் ரிதா கட்ஸ் உறுதி செய்துள்ளார். ஈராக் நாட்டின் மோசூல்நகரில் இருந்து இந்த எச்சரிக்கை டுவிட்டர் பதிவுகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிரியாவின் ரக்கா நகரில்  வைத்து அமெரிக்க வான் தாக்குதலில் சாலி ஜோன்ஸ்ன் கணவர் கொல்லப்பட்டார். அதில் இருந்தே அவர் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க இருப்பதாக குறிப்பிட்டு வந்துள்ளார். தற்போது இவரது டுவிட்டர் பதிவுகளில் இங்கிலாந்தின்  லண்டன், கிளாஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இருப்பதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: