இலண்டன் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஸ்பெய்ன் பிரதமர் அஞ்சலி!

இலண்டனில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் (Mariano Rajoy) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஸ்பெய்னின் ஆளுங்கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெறுவதற்கு முன்னதாக உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, லண்டனில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த பெண் ஒருவருக்கு உதவி செய்யும் பொருட்டு சென்ற ஸ்பெய்ன் பிரஜை ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், இந்தத் தாக்குதல்களுக்கு இலக்காகி ஸ்பெய்ன் பிரஜை ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதுடன், 48 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
துருக்கி இராணுவ புரட்சி: 44 நீதிபதிகள் கைது!
இரட்டை குடியுரிமை விவகாரம்: பதவியை விலகிய அவுஸ்திரேலிய அமைச்சர்!
பிரான்ஸில் கத்தி குத்து தாக்குதல் -ஒருவர் பலி!
|
|