இலண்டனில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றம்!

Saturday, June 24th, 2017

அவசர தீ அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடக்கு லண்டனில் 800க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கேம்டன் கவுன்சில் (council estate in Camden) பகுதியிலுள்ள ஐந்து தொடர்மாடி குடியிறுப்புகளில் வசிப்பவர்களே இந்த அவசர தீ அனர்த்த பாதுகாப்பு காரமணாக இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்அவர்களை விடுதிகளில் பாதுகாப்பாக குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேம்டன் கவுன்ஸில் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாம் உடற்பயிற்சி நிலையமொன்றில் இரவுப் பொழுதை கழித்ததாக சிலர் குடியிறுப்பாளர்கள் கூறியதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளதுஅண்மையில், மேற்கு லண்டனில் உள்ள தொடர்மாடிக் குடியிறுப்பொன்றில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 79 பேர் பலியானர்இந்த நிலையிலேயே, குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: