இலண்டனில் தீவிரவாத தாக்குதல்தாரிக்கு இலங்கையுடன் தொடர்பு? – பிரித்தானிய!
Tuesday, February 4th, 2020இலண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்திய சுடேஸ் அமானின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dailymail வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கத்திகுத்து தாக்குதலை மேற்கொண்ட சுடேஸ் அமான் பொலிஸாரினால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில் , Dailymail வெளியிட்டுள்ள செய்தியில் சுடேஸ் அமான் குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,“லண்டனில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரர்களுடன் ஹரோவில் வாழ்ந்த வேளை தனது 17 வயதில் சுடேஸ் அமான் முதன் முதலில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடத்தொடங்கினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்பிரல் 2018 இல் அவரது நடவடிக்கைகளை அறிந்த பொலிஸார் மே மாதத்தில் அவரை கைதுசெய்துள்ளனர். அவரது கணணியையும், கையடக்க தொலைபேசியையும் கைப்பறினர்.
அமான் தனது குடும்பத்தவர்கள்,நண்பர்கள், காதலியுடன் தனது தீவிரவாத கொள்கைகள் குறித்து கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார், கத்தியை பயன்படுத்தி தனது தாக்குதலை மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Related posts:
|
|