இலண்டனிலிருந்து சென்ற விமானத்தில் விபரீதம்!

Monday, May 1st, 2017

இலண்டனில் இருந்து டெல்லி நோக்கி சென்ற பயணிகள் விமானம் விமானத்தில் திடீரென ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதன்காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலண்டனில் இருந்து டெல்லிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அவசர கால ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்தது. இதனால் பயணிகள் கடும் அச்சம் அடைந்தனர்.விமானத்தில் திடீரென ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ஆக்சிஜன் முகமூடிகள் வெளிவந்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். வேறு விமானம் ஏற்பாடு செய்து பயணிகள் டெல்லி அனுப்பி வைக்கப்படுவார்கள் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் முகமூடி என்பது விமானப் பயணத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் பயணிகளுக்கு சீராக ஆக்சிஜன் கிடைக்க வழி செய்யும் அமைப்பாகும்.

Related posts: