இலட்சக்கணக்கான வெளிநாட்டினருக்கு குடியுரிமை அளிக்க உறுதி! – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன், பிலடெல்பியாவில் நடந்த கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்றுமுன்தினம் இரவு உரையாற்றினார். அதன்போது அவர், “நாட்டில் உள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருவேன். வெறுப்புணர்வை அன்பு வெற்றி கொள்ளும். அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக என்னை நியமித்திருப்பதை பணிவுடன், மன உறுதியுடன், பெரும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன்” என கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “எல்லா அமெரிக்கர்களும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான அதிகாரம் வழங்கப்படும். நான் ஜனாதிபதியானால், ஏராளமான வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கும், சம்பளத்தை உயர்த்துவதற்கும் முன்னுரிமை தருவேன்” என்று குறிப்பிட்டார். “(பிற நாடுகளில் இருந்து) இடம் பெயர்ந்து வந்து அமெரிக்காவில் வாழ்ந்து வருவதுடன், நமது பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்து வருகிற இலட்சக்கணக்கானோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான பாதை வகுக்கப்படும்” என வாக்குறுதி அளித்தார்.
டொனால்டு டிரம்பை பற்றியும் ஹிலாரி குறிப்பிட தவறவில்லை. அவரைப் பற்றி பேசும்போது, “டிரம்பைப் பொறுத்தமட்டில், அவர் உலகின் பிற பகுதிகளுடன் நம்மை பிளவுபடுத்த விரும்புகிறார். அவர் நாம் எதிர்காலத்தை எண்ணி அச்சப்படுவதை, நாம் ஒருவருக்கொருவர் அச்சப்படுவதை விரும்புகிறார்” என சாடினார்.
Related posts:
|
|