இலங்கை மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் அமெரிக்கா!

trump1_3158808f Wednesday, September 13th, 2017

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள காத்திரமான வழிமுறை அவசியம் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

2018ஆம் ஆண்டு தெற்காசியாவுக்காக செலவிடப்படும் நிதி தொடர்பில் நடைபெற்ற நிகழ்வில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வெல்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலை நாட்டுவது தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது.அதனை நிறைவேற்றுவது தொடர்பில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான திட்டவட்டமான நடவடிக்கை பட்டியல் ஒன்றையும் சர்வதேச ராஜதந்திரிகள்க முன்னிலையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய மாகாண சபைகளுக்கு அதிக நிர்வாக அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பு திருத்தச்சட்டம், பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தரத்திற்கு பொருந்தும் மற்றொரு சட்டம், இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீட்டெடுத்தல், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுதல், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவுதல், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க மற்றும் தண்டிக்க நம்பகமான செயல்முறை அந்த திட்டவட்டமான வழிமுறைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிமன்றத்தை போர்க்குற்ற விசாரணைக்காக நிறுவுவதாக வாக்குறுதியளித்தது.அதற்காக மேலும் இரு வருட காலஅவகாசம் வழங்குவதற்கு 2017ஆம் ஆண்டு மனித உரிமை மாநாட்டு அமர்வில் இணக்கம் வெளியிடப்பட்டது.

எப்படியிருப்பினும் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரிப்பதாக இலங்கையின் சமகால அரசாங்கம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!