இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கான எச்சரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.
கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்கமைய இலங்கையில் காணப்படுகின்ற பாலியல் தாக்குதல் ஆபத்துக்கள், ஆபத்தான குடிபானங்கள், வீதி விபத்துக்கள், டெங்கு தொற்று மற்றும் கடன் அட்டை மோசடி தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் 29ம் திகதி வரை டெங்கு நோய் தொற்றினால் 50000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.எனவே இது தொடர்பில் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்படுவதாகவும், கடத்தல் மற்றும் வன்முறைக்கு அவர்கள் பொறுப்பாளியாகவும் அறியப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் நீதித்துறை மிகவும் மெதுவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
|
|