இலங்கை உள்ளிட்ட13 நாடுகளுடன் விசேட விமான சேவை தொடர்பில் இந்தியா பேச்சுவார்த்தை!

Wednesday, August 19th, 2020

பாதுகாப்பான சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக இலங்கை உட்பட 13 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த விமானப் பயண ஒப்பந்தங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அதன் அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் Air bubbles எனப்படும் இரு தரப்பு விமான போக்குவரத்து ஒப்பந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசின் வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, இந்தியா, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சியில், 13 நாடுகளுடன் இருதரப்பு எயர் பப்பிள்ஸ் எனப்படும் விமான போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அதன்படி அவுஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகியவை இதில் அடங்கும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.

Related posts: