இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் ஈரான் – இலங்கை மீது கடும் கோபத்தில் மேற்குலகம்!

Monday, May 13th, 2024

ஈரானுக்கு சொந்தமான தனியார் விமான நிறுவனமான Mahan-Air விமானங்களை இலங்கையில் வான்வழிச் செயற்பாட்டுக்கு அனுமதிப்பது தொடர்பாக அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன..

1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, தற்போது 32 விமானங்களுடன் இயங்கும் Mahan-Air ஈரானில் பயங்கரவாதத்திற்கு பொருட்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமாக 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவால் பெயரிடப்பட்டது.

மேலும், ஜெர்மனி, பிரான்ஸ், சிரியா, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் Mahan-Air தடை செய்யப்பட்டுள்ளது

எப்படியிருப்பினும் தற்போது ஈரானுக்கு நட்பாக 10 நாடுகளில் உள்ள 44 இடங்களுக்கு போக்குவரத்து செய்யும் Mahan-Air நிறுவனம் அண்மையில் இலங்கையில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு அனுமதி கோரியது. அதற்கமைய, இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: