இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை!

Tuesday, September 13th, 2016

தென் கொரியாவில் ​ இடம்பெற்ற பயங்கர நிலநடுக்கத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் தென்கொரியாவின் கியோன் ஜூ நகரை மையமாக கொண்டு 5.8 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் , அதனை அடுத்து தொடர்ந்தும் சில நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான இலங்கை பணியாளர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை என வெளிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் உபுல் தேசப்பிரிய எமது செய்திச்சேவைக்கு தெரிவித்திருந்தார்.தென் கொரியாவில் சுமார் 30 ஆயிரம் இலங்கையர்கள் தொழில் புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தென் கொரியாவின் 4 அணுமின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

1473753633_9284157_hirunews_foreign

Related posts: