இரு வாரங்களுக்கு முடங்குகின்றது மலேசியா!

Tuesday, March 17th, 2020

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், மலேசியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், வெளிநாட்டவர் மலேசியாவுக்குள் நுழைவதையும் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்போவதாக மலேசியா அறிவித்துள்ளது.

மேலும், மலேசியாவில் இருவாரங்களுக்கு நாடு முழுவதும் பொது இடங்களில் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் மேலும் அதிகரித்து அதிகரித்துவருகின்றது. இன்று மட்டும் பாதிக்கப்பட்ட மேலும் 125 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 553ஆக அதிகரித்துள்ளது.

இந் நிலையிலேயே மலேசியா அரசினால் குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

Related posts: