இராணுவ சிப்பாய்க்கு கடூழிய ஆயுள் தண்டனை!

Tuesday, July 18th, 2017

மூன்று அமெரிக்க இராணுவ பயிற்றுவிப்பாளர்களை கொலை செய்த ஜோர்டான் இராணுவ சிப்பாய்க்கு கடூழிய ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

கடந்த நவம்பர் மாதம் அல்ஜவ் விமானத் தளத்தை நோக்கி வாகனம் ஒன்றில் சென்ற அமெரிக்கர்களை நோக்கி, ஜோடான் இராணுவ சிப்பாய் தாக்குதலை நடத்தியுள்ளார்.

வாகனத்தில் வந்த பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர் ஸ்தலத்தில் பலியான அதேவேளை, ஏனைய இருவரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக அமெரிக்க பயிற்றுவிப்பாளர்கள் பயணித்த வாகனம் நிறுத்த தவறியதன் காரணமாகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஜோடானிய தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: