இராணுவத்தை கேலி செய்ததால் மியான்மர் நடிகருக்கு சிறை!
Saturday, August 27th, 2016மியான்மர் படையை கேலியாக விமர்சித்து தன்னுடைய காரில் வண்ணம் தீட்டியிருந்த அந்நாட்டு நடிகர் ஒருவருக்கு சுமார் மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரமிக்க ராணுவம் நாய்களின் படை என்ற குற்றச்சாட்டு உள்பட பல அடைமொழிகளை நடிகர் துன் லின் தெயன் மார்ச் மாதம் தன்னுடைய காரில் எழுதியிருந்தார். உடனடியாக கைது செய்யப்பட்ட அவர், அவதூறு வழக்கில் குற்றம் காணப்பட்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள் அனைவரும் வாக்களித்த தேர்தலுக்கு பின்னர் அரசியல் சுதந்திரம் மியான்மரில் அதிகரித்து வருகிறது.ஆனால், ராணுவத்தை பொதுவாக விமர்சிப்பது குற்றமாகவே பார்க்கப்படுகிறது
Related posts:
நேட்டோ அமைப்புக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - ட்ரம்ப்!
ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிக்க சவுதி இணக்கம்!
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி நீதிமன்ற விசாரணையின் போது உயிரிழப்பு!
|
|