இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஜெர்மனில் பயங்கரம்!

train-acc Thursday, December 7th, 2017

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஜெர்மனியின் தியூசல்டோர்ஃபு பகுதியில் உள்ள மீர்பஸ்க் என்ற இடத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 6:30 மணியளவில் 150க்கும் மேற்பட்டோருடன் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த நிலையில் குறித்த ரயில் எதிர்பாராத விதமாக டிபி கார்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விபத்தில் எந்தவித உயிர்சேதமும் இல்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.