இரண்டு புகையிரதங்கள் மோதி கோர விபத்து: இருவர் பலி – 70 பேர் படு காயம்!

Tuesday, February 6th, 2018

அமெரிக்காவில் சரக்கு புகையிரதமும் பயணிகள் புகையிரதமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் 70 பேர் வரைகாயம் அடைந்துள்ளனர்.

150 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இருந்து மியாமி நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த அம்டிரக் பயணிகள் புகையிரதம்அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமான சவுத் கரோலினா மாநிலத்திற்கு உட்பட்ட ஸேஸி பகுதியில் எதிர்த்திசையில் வந்த சரக்கு புகையிரதத்துடன்நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணிகள் புகையிரதத்தின் என்ஜின் மற்றும் இரு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது.

Related posts: