இரண்டு ஏவுகணைகளை சோதித்தது வடகொரியா!

Tuesday, August 6th, 2019

வடகொரியா இரண்டு அடையாளம் தெரியாத ஏவுகணைகளை சோதித்துள்ளது.

இரண்டு வார குறுகிய காலப்பகுதிக்குள் வடகொரியா முன்னெடுக்கும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும் என தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஹவாங்கா மாகாணத்தின் கடற்பரப்பின் ஊடாக கிழக்கு நோக்கி இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமை தொடர்பாக அவதானம் செலுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் கலந்தாய்வு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு வடகொரியா எதிர்ப்பை வெளியிட்டிருப்பதுடன், அதன்அடிப்படையிலேயே இந்த ஏவுகணை சோதனை நடத்தபட்டிருப்பதாக கருதப்படுகிறது.

Related posts: