இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடிப்பு – 20 பேர் உயிரிழப்பு!

Monday, April 1st, 2019

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இருந்து புறப்பட்டு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து தீப்பிடித்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்தின் என்ஜின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்து சில நொடிகளுக்குள் பேருந்தின் இருக்கைகள் வழியாக மளமளவென்று பரவிய தீயில் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதற்குள் பயங்கர சத்தத்துடன் பேருந்தின் ஒரு பகுதி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 20 பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயங்களுடன் பலர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts:

ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் - அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சுகாதார பரிசோதகர...
அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக பயணக்கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அரச வைத்...
நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்தில் முழுமையாக தீர்க்கப்படும் - க...