இம்ரான்கானை கைது செய்தது சட்டவிரோதமானது – பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Friday, May 12th, 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது,

ஆகவே அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்ட அதேநேரம் இம்ரான் கானுக்கு நடந்தது நீதி அல்ல என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த விசாரணை இடம்பெற்றபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் கைது செய்யப்பட்டதன் சட்டபூர்வமான தன்மை குறித்து கேள்வியெழுப்பிய நீதிபதிகள் ஒரு மணி நேரத்திற்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இம்ரான் கானின் கைது நாடு முழுவதும் வன்முறை போராட்டங்களை தூண்டியுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பேண இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்டதக்கது

000

Related posts: