இபோலா நோய் – 1600 பேர் பலி!

Thursday, July 18th, 2019

கொங்கோ குடியரசில் ஏற்பட்டுள்ள இபோலா நோய்பரவலை அடுத்து, உலக சுகாதார ஒழுங்கமைப்பினால் பூகோள அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த நோய் கட்டுப்பாட்டுக்கான நிதி உதவிகளை பெருக்கிக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

எனினும் கொங்கோ குடியரசின் எல்லைப் பகுதி மூடப்பட வேண்டுமா? என்பது குறித்து உலக சுகாதார ஒழுங்கமைப்பு எதனையும் குறிப்பிடவில்லை.

ஆனால் சர்வதேச அளவில் இந்த நோய் பரவுவதற்கான அச்சுறுத்தல் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொங்கோ குடியரசில் இந்த நோய் அடையாளம் காணப்பட்டதில் இருந்து இதுவரையில் சுமார் ஆயிரத்து 600 பேர் இந்த நோய் பீடிக்கப்பட்டு மரணித்துள்ளனர்.

2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையில் மேற்கு ஆபிரிக்காவில் இபோலா பரவியதை அடுத்து 11 ஆயிரம் பேர் வரையில் மரணித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: