இபோலா தொற்று நோயை தடுக்க 02 மருந்துகள்!

Wednesday, August 14th, 2019

உலகில் மிக கொடிய வைரஸாக கருதப்பட்ட இபோலா தொற்று நோயை தடுப்பதற்காக பரிசோதிக்கப்பட்ட 04 மருந்துகளில் 02 மருந்துகளின் பரிசோதனை 90 வீதம் வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இபோலா வைரஸின் தாக்கத்தினால் சுமார் 11,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் கொங்கோ இராச்சியத்திற்கு விநியோகிக்கப்படவுள்ளன. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்தே இந்த மருந்தை பரிசோதித்துள்ளனர்.

சியரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் கொங்கோ இராச்சியத்திலேயே இபோலா வைரஸ் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடுதல் மற்றும் சுரப்பிகள் மூலமே இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


பல்கலை புதிய கல்வி ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
விரைவில் வருகின்றது புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம்!
போதைப்பொருட்களை விரைவில் கட்டுப்படுத்த முடியும் - விமானப்படை தளபதி!
உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் மீள் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்!
அரச நிறுவனங்களின் தலைவர்களிற்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு!