இன மோதல்களை தடுக்க விரைவில் பேச்சுவார்த்தை – ஆங் சான் சூசி!

Wednesday, August 10th, 2016

மியான்மரில் இன ரீதியான மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் ஆரம்பமாகும் என்று அந்நாட்டின் பிரதமருக்கான செயல்பாடுகளை பின்னணியில் இருந்து மேற்கொள்ளும் நடைமுறை தலைவராகக் கருதப்படும் ஆங் சான் சூ சி அறிவித்துள்ளார்.

நாட்டின் மத்திய அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இன்னமும் கையெழுத்திடாத ஆயுதம் தாங்கிய குழுக்களையும், போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்ட போராளிகளையும் உள்ளடக்கியதாக இந்தப் பேச்சுவார்த்தை அமையவுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மியான்மரை ஆட்சி செய்த சக்தி வாய்ந்த இராணுவத்துக்கும், மியான்மரின் இன சிறுபான்மையினருக்கும் இடையே நடந்த மோதல்களினால் சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Related posts: