இன்று முதல் வங்கிகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 2000 ரூ. மட்டுமே மாற்ற முடியும்!

Friday, November 18th, 2016

இன்று முதல் வங்கிகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4500 ரூபாய் மாற்றலாம் என்பது 2000 ரூபாயாக குறைக்கப்படுவதாக இந்திய பொருளாதார விவகார அமைச்சக செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பாக தான் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4000 ரூபாய் மாற்றலாம் என்பது 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ் “ஒருவரே அடிக்கடி வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருவதால் தான், அனைத்து வங்கிகளிலும் மக்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், நாளை (18.11.2016) முதல் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 2,000 ரூபாய் வரை மட்டுமே வங்கிகளில் புதிய தாள்களாக மாற்றிக் கொள்ள முடியும்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ”பயிர் கடனுக்காக விவசாயிகள் வங்கிகளில் வாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம் என்றும் பயிர் காப்பீட்டுக்கான தவணைத் தொகையைச் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என செவ்வாய்க்கிழமையன்று (8.11.2016) அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு, நாடெங்கும் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

_92477208_banak

Related posts: