இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் டொனால்ட் ட்ரம்ப்..!

Friday, February 7th, 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதிவரை அவரின் விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு விஜயங்களை ஆராயும் உயர்மட்ட குழு, கடந்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, நிலமைகளை ஆராய்ந்தததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: