இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

Tuesday, March 14th, 2017

வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட நிக்கோபர் தீவில் இன்று காலை 8 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பூமிக்கு அடியில் சுமார் பத்து கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 அலகுகளாக பதிவானதாக இந்திய புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதே நேரத்தில் இந்தோனேசியாவிலும் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

அத்துடன் அங்கு 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டமையால் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் செய்திகள் வெளியாகவில்லை. அத்துடன் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: