இந்தோனேஷியவில் நிலச்சரிவும்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 19ஆக அதிகரிப்பு!

Thursday, September 22nd, 2016

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலச்சரிவாலும் வெள்ளத்தாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 19ஆக அதிகரித்துள்ளதாக, இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளத்தில், ஜாவாத் தீவே அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அத்தீவிலுள்ள கருட் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளம் 6.5 அடி உயரத்துக்கு உயர்ந்தது. இதன் காரணமாக, 16 பேர் உயிரிழந்ததோடு, இன்னும் 8 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. இதில் உயிரிழந்தோரில், 8 மாதக் குழந்தையொன்றும், 10 வயதுக்குக் குறைவான நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்படுகிறது.

இங்கு ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கூடாரங்களில் குடியேற்றப்பட்டுள்ளனர். தவிர, ஜாவாவின் மேற்குப் பகுதியில் உள்ள சுமேடங் பகுதியில் நிலச்சரிவு காரணமாக, மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அத்தோடு, இன்னுமொருவரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

syria-02-06-16-seithyworld

Related posts: