இந்தோனேசியாவில் 190 பேர் பலி? படகு உரிமையாளர் கைது!

இந்தோனேசிய பயணிகள் படகு விபத்து தொடர்பில் அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமாத்திராவில் உள்ள தோபா ஏரியில் குறித்த பயணிகள் படகு மூழ்கியதை அடுத்து, 3 பேர் மரணித்ததுடன், 190க்கும் அதிகமானவர்கள் இன்னும் தேடப்படுகின்றனர்.
இந்தோனேசியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய படகு விபத்தாக இது கருதப்படுகின்றது.
குறித்த படகில் 60 பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த போதும், பல மடங்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த அனர்த்தத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை அடுத்து குறித்த படகின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள போதும், அவர் மயக்க நிலையில் இருப்பதால் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஜேர்மன் தீர்மானம்!
அதிகார மிடுக்கில் மிரட்டலாம்! ஆனால் அது பகற் கனவுதான் - வடகொரியா!
இந்திய உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
|
|