இந்தோனேசியாவில் பல்லி வகையை பாதுகாப்பதற்கு தேசிய பூங்காவிற்குப் பூட்டு!

Thursday, July 25th, 2019

அரிய வகை உயிரினத்தை பாதுகாப்பதற்காக சுற்றுலா தளமாக இயங்கி வரும் பூங்காவையே இந்தோனேஷியாவில் மூடவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு தீவுகளில் அமைந்துள்ளது கொமோடோ தேசிய பூங்கா. இதன் மொத்த பரப்பு 1,733 சதுர கிமீ ஆகும்.

கொமோடா டிராகன் எனும் அரிய பல்லி வகையை பாதுகாக்க கடந்த 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த பூங்கா.

1991ஆம் ஆண்டு இப்பூங்கா யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு லட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பூங்காவில் வாழும் அரிய வகை கொமோடா டிராகன்களை பாதுகாக்க கொமோடோ தேசிய பூங்காவை அடுத்த வருடம் இந்தோனேஷியா மூடவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அழிவின் விளிம்பில் இருக்கும் கொமோடோக்களை பாதுகாக்க நிச்சயம் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: