இந்தோனேசியாவில் கோர விபத்து: 27 பேர் உயிரிழப்பு!
Monday, February 12th, 2018இந்தோனேசியாவின் ஜாவா தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
40 பேருடன் ஜாவா தீவில் உள்ள சுபாங் மலைப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக சென்ற பேருந்தே அவ்வாறு விபத்துக்குள்ளானது.
மேலும் உயிரிழந்தவர்களைத் தவிர காயமடைந்த ஏனையவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாகவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
5வது சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோமா நிலையில்
|
|