இந்திய விமானப்படை விமானம் விபத்து!

Saturday, September 10th, 2016

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் பர்மர் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பர்மர் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.  பயிற்சிக்கு சென்ற போது விமானம்  புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. அதில் இருந்து விமானி, பாராசூட் மூலம் தப்பினார். இதையடுத்து விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. பின்னர் தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமானம் விபத்துக்குள்ளானது பற்றி விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

hawk 4-8-16

Related posts: